ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!
தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம் சாட்டினார்.
உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றும் இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் மீதான சந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவ்வாறான தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உகாண்டவில் இருந்தும் வந்த தனியார் ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவுக்கு பயணித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மௌனமாக இருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றங்கள் மூலம் வெளிக்கொணர கட்சியின் சட்டக் குழு திட்டமிட்டுள்ளதாக முஜிபுர் எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)