சுரேனின் பதவிகளை பறித்தது சு.க !!
அரசாங்கத்துக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சு பதவியைப் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதிச் செயலாளர், வன்னி மாவட்டத் தலைவர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து அவரை நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார்.