பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு முழு ஆதரவு- ரஷியா உறுதி..!!
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு மேலும் சில துறைகளில் ரஷியா தனது மேற்கத்திய நாடுகள் எவரையும் நம்ப முடியாது. ஐ.நா சாசனத்தை மீறாத அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதில் இந்தியாவும் உள்ளது. எங்கள் இடையே இரு தரப்பு ஒத்துழைப்புஉள்ளது.
இந்தியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உண்மையான தேசபக்தர்.
இந்தியா எங்களின் மிக மிக பழையமான நண்பர். நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் உறவை திறன் வாய்ந்த கூட்டணி என்று அழைத்தோம். நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா கருத்தை ஆதரித்தோம்.
இந்தியாவுடன் எளிமையான வர்த்தகத்தை உள்ளூர் உற்பத்தியுடன் மாற்றியமைக்கத் தொடங்கினோம், இந்தியாவுக்குத் தேவையான பொருட்கள் உற்பத்தியை அந்த பிராந்தியத்தில் மாற்றினோம்.
தொழில்நுட்ப பரிமாற்றம் உள்பட பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் ரஷியா வழங்க முடியும் என்று உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.