;
Athirady Tamil News

வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்- மத்திய நிதி மந்திரி நம்பிக்கை..!!

0

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அட்லாண்டிக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதாரம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

இன்று நாம் முன்பு இருந்த இடத்திற்கு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலைக்கு திரும்ப முடிகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா நிச்சயமாக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும். எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஏனெனில், தொற்றுநோய் (கொரோனா) காலத்தின்போது அல்லது அதற்கு சற்று முன்னதாக, நாங்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினோம். தொற்று நோய்களின் போது, உருவான ​​​​சவால் வாய்ப்பாக மாற்றப்பட்டது,

தொற்று நோய்க்கு முன், இது எங்கள் கடமையாக இருந்தது, மேலும் நாங்கள் நிதி கட்டமைப்பு மற்றும் செயல்முறை ஆகிய இரண்டிலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டோம்.

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு வலுவானது. சரியான காலத்தில் அது சிறப்பாக இருக்கிறது. இது சர்வதேச அளவில் வலுப்படுத்தும். இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் தங்கள் இடத்தை கண்டு பிடித்து
சுமூகமான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.