இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் இந்தியா முக்கிய நகர்வு..!!
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் துரிதமாக நிதியுதவியை வழங்க வேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நிதியமைச்சருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியோவாவுக்கும் இடையில் இன்று வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியு்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமான இந்திய நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி வசந்தகால பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகின. இதனிடையே இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்றி, இந்திய வெளிவிவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும், இந்தியாவின் உயர் கட்ட பொருளாதார நிபுணர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
இலங்கைக்கு மிக விரைவான கடன் வசதியை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் விடயங்களை முன்வைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ளதாக இலங்கை நிதியமைச்சர் அலி சப்றி கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் ஒரு உடன்பாடு வரும் போது கூட உத்தரவாதம் வழங்க ஒருவர் தேவை எனவும், அந்த உத்தரவாதம் வழங்குநராக இந்தியாவை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிற்கலாம் எனவும் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.