இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!
இராகலை நகரில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (20) மாலை டயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் இராகலை நகரம் டயர் புகையால் சூழ்ந்ததால் சந்திக்குச் சந்தி டயர்கள் எரியூட்டப்பட்டன.
“கோட்டா கோ ஹோம்” கோஷம் எழுப்பினர். நகரில் கடைகள் மூடப்பட்டுள்ளன. கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. மூன்று மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மாலை 5.40 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால் இராகலை நகரிலிருந்து வலப்பனை, உடப்புஸ்ஸலாவை போன்ற தூரப் பிரதேசங்களுக்கு செல்வோர் பாரிய போக்குவரத்து அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்தனர். ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தன் பின்னர் பஸ்களில் ஏறி வீடுகளுக்கு திரும்பினர்.
அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?
ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !!
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)
ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)
ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)