மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி வலியுறுத்தல்..!!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 15 ஆவது குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
குடிமைப் பணிகள் தினம் என்பதன் உண்மையான பொருள் சாமானிய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வர உறுதியேற்க வேண்டும்
பல ஆண்டுகளாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் தீவிரமான பங்களிப்பை செய்ய வேண்டும்.
2047-ல் சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டு கொண்டாடப்படும் போது, இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதற்கு தற்போதுள்ள அதிகாரிகள் தங்களின் திறனை அதிகரித்து உறுதி செய்ய வேண்டும். அடுத்து வரும் 25 ஆண்டுகளில் தீவிர செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.