லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள் நுழைய தடை விதித்தது ரஷியா..!!
22.4.22
06.25: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
03.30: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
00.30: அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட 29 அமெரிக்கர்கள் தங்கள்து எல்லைக்குள் நுழைய பயண தடை விதித்துள்ளது ரஷியா.