லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது செயலாளர்..!!
23.4.22
04.45: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் 83 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
00.25: ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் சந்திக்கிறார். இந்த சந்திப்பு ரஷியாவில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.