ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை தூக்கி வீசும் திருவிழா..!!
கர்நாடகா மாநிலம் கட்டீல் நகரம் அருகே ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக ‘தூத்தேதாரா’ என்ற நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆத்தூர், கொடத்தோர் என்ற இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்த அவர்கள் 20 மீட்டர் இடைவெளியில் நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் எரியும் தீப்பந்தங்களை
தூக்கி வீசினர்.
இதில் தீக்காயம் அடைந்தவர்கள் மீது குங்குமம் கலந்த தண்ணீர் உடனடியாக வீசியடிக்கப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் 5 முறை மட்டுமே தீப்பந்தங்களை தூக்கி வீச வேண்டும் என்று இந்த திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு நிபந்தனையாக விதிக்கப்படுகிறது.
இது குறித்து வெளியான வீடியோ பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.