கோட்சேவை ஆதரிக்கிறார்.. வெளிநாட்டினரை காந்தியின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்- பாஜக மீது சிவசேனா தாக்கு..!!
பாஜக நாதுராம் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு விருந்தினர்கள் வரும்போது, அவர்கள் நூல் நெய்ய காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று பாஜக மீது சிவசேனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா தலையங்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-
குஜராத்தில் இரும்பு மனிதர் சர்தார் படேலின் பிரமாண்ட சிலை கட்டப்பட்டாலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிற வெளிநாட்டு விருந்தினர்கள் அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை. ஏனெனில் காந்தி உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.
பாஜக நாதுராம் கோட்சேவை பாஜக பெருமைப்படுத்துகிறது. ஆனால் இந்திய சுற்றுப்பயணத்தில் வெளிநாட்டு பிரமுகர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
ஜான்சன் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், தேசிய தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் வகுப்புவாத பதட்டமான சூழல் நிலவியது. நாடு சுதந்திரம் பெற்றபோது, மத வெறுப்பு மற்றும் வன்முறை சூழல் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் அதே சூழ்நிலையை இங்கிலாந்து காண்கிறது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய அதே நிலையில்தான் ஜான்சன் இந்தியாவைப் பார்த்தார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.