நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்”!! (படங்கள்)
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் “தெய்வீகத் திருக்கூட்டம்” தொடர் நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு, 22.04.2022 வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் இடம்பெற்றது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், இரண்டாவது குருமகா சந்நிதானம், வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் திருமுன்னிலை வகிக்க, அமெரிக்கா, ஹாவாய் சைவ ஆதீன குருதேவர், சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர், ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்விலே, வரவேற்புரையினை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மா.அனந்தலட்சுமி அவர்களும் தொகுப்புரையினை திருமதி வி.சிவமணி அவர்களும் வழங்கினர். மாத்தளை கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை அதிபரும் இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளரும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள ஆன்மிகப் பிரசாரகருமாகிய செல்வி. யோகராணி பாலசுப்பிரமணிய சர்மா அவர்களின் “தித்திக்கும் திருப்புகழ்” என்னும் தலைப்பிலான பேச்சு நிகழ்வும் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வரும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள இந்துசமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பயிற்சி நிலையத்தின் ஆன்மிகப் பிரசாரகர் பயிற்சி நெறியின் விரிவுரையாளருமாகிய செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் “பண்சுமந்த பாடல்” என்னும் தலைப்பிலான சிறப்புரையும் – திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்லம் மற்றும் அரியாலை ஸ்ரீ துரவடிப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை மற்றும் கலை நிகழ்வுகளோடு, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ர.நகுலா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வுகள் நிறைவுற்றன.
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4.00 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலாமண்டபத்தில் இடம்பெற்றுவரும் இத் தெய்வீகத் திருக்கூட்ட நிகழ்விற்குரிய அனுசரணை மற்றும் ஏற்பாட்டினை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்ள, இணை அனுசரணையினை அகில இலங்கை இந்துமாமன்றம் வழங்குகிவருன்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”