காலிமுகத்திடலில் பொலிஸாருக்கு பாடமெடுத்தார் மனோ !!
காலிமுகத்திடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ எம்.பி, ”காலிமுகதிடல் ஜனாதிபதி மாளிகை வலயத்தை சுற்றி வீதிகள் நீண்ட முட்கள் கொண்ட இரும்பு வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளன. கொழும்பு எம்பீக்களாக நானும், முஜிபுரும், சென்று பார்வையிட்டோம். காவலுக்கு நின்ற படையினரிடம் “அரசியல் பொலிஸ் இல்லை, மக்கள் பொலிஸ்” என ஞாபகப்படுத்தினோம். ” எனவும் மனோ தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?