அடுத்த வாரமும் தினசரி மின்வெட்டு தொடரும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.!! (படங்கள்)
நாளை (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தினமும் நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரை வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும்.
இதற்கிடையில், ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரையிலான வலயங்களுக்கு தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின்பிறப்பாக்கிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் தேவை முகாமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தினமும் காலை 6 மணி முதல் 9.20 மணி வரை சிசி பகுதியில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”