லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ஐ.நா. பொது செயலாளர் ரஷியா செல்வது நியாயமில்லை – அதிபர் ஜெலன்ஸ்கி..!!
25.4.2022
05.45: ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகை உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் மிக முக்கியமான பண்டிகை ஆகும்.
இந்நிலையில், ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் போர் நிறுத்தத்துக்கு ரஷியா உடன்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளரும் வலியுறுத்தி உள்ளார்.
03.15: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்தனர். கீவ் வந்த அமெரிக்க தலைவர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
00.25: உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியா செல்வது எந்த நீதியும் இல்லை, சரியான முறையும் கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.