;
Athirady Tamil News

பசியை போக்கும் பனங்கிழங்கு!!! (மருத்துவம்)

0

நாம் பல இடங்களில் குச்சிகுச்சியாக ஓர் கிழங்கினை கட்டுக்கட்டாக வைத்து விற்றுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கோம். ஆனால் அதை விற்பவர்கள் டிப்டாப்பாக இல்லாத காரணத்தால் அதை வாங்கவோ, வாங்கி உண்ணவோ தயங்கி, வாங்காமல் சென்று விடுவோம். இனி அந்த தவறை செய்யவே செய்யக்கூடாது.

நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது பனங்கிழங்குன்னு சொல்லலாம்.

*இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, மேல் தோலையும் நடுவிலிருக்கும் சற்று கடினமான குச்சி போன்ற பகுதியையும் நீக்கி விட்டு சாப்பிட வேண்டும்.

*குளிர்ச்சி தன்மையுடைய பனங்கிழங்கு மலச் சிக்கலை தீர்க்க வல்லது.

*தேங்காய்ப்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலமடையும். குறிப்பாக பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையுமாம்.

*வேகவைத்து பனங்கிழங்கை, சிறுசிறு துண்டு களாக்கி, காயவைத்து, அத்துடன் கருப்பட்டியை சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட உடலுக்கு தேவையான இரும்புச்சத்து எளிதில் கிடைக்கும்.

*பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.

*வேகவைத்து, நறுக்கி, காயவைத்து எடுத்து, அதை மாவாக்கி வைத்துக்கொண்டால், நாம் விரும்பும் சுவையில் தோசையாகவோ, உப்புமாவாகவோ அல்லது கூழ் தயாரித்தோ உண்ணலாம்.

*நார்ச்சத்து மிகுந்த கிழங்கு என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

*பனங்கிழங்கை வேகவைத்து, அத்துடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து மாவாக்கி சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

*பனங்கிழங்கு பசியை தீர்க்கும்.

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அரிய பொக்கிஷமான பனங்கிழங்கை இனி தவறாமல் உண்டு ஆரோக்கியம் பெறுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.