கேரளாவில் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
கேரளாவின் பிரசித்தி பெற்ற சிவகிரி மடத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் ஸ்ரீநாராயண குரு. ஸ்ரீ நாராயண குருவின் ஒரே ஜாதி, ஒரே மதம் ஒரே தெய்வம் என்ற கொள்கை கோட்பாடுகளை கொண்டவர். அனைத்து மதங்களின் கொள்கைகளையும், சமத்துவத்துடனும், சம மரியாதையுடனும் கற்பிக்கபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
இவரது கருத்தை பரப்ப உருவாக்கப்பட்டதே சிவகிரி பிரம்ம வித்யாலயம். இங்கு நாராயண குருவின் படைப் புகள் மற்றும் இந்திய தத்துவம் குறித்த படிப்பு கற்பிக்கப்படுகிறது.
இந்த மடத்தின் பொன்விழா ஆண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட மடத்தின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பிரம்ம விதியாலயத்தின் பொன் விழாவையொட்டி ஓராண்டு காலம் நடைபெறும் நிகழ்ச்சி கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து லோகோவையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ நாராயண அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா தலைமை தாங்கினார். வர்க்கலை சிவகிரி மடத்தில் சுவாமிகள், நிர்வாகிகள் , பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
90 ஆண்டுகால தீர்த்ததானம் மற்றும் பிரம்ம வித்யாலயத்தின் பொன்விழா பயணம் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் மட்டுமல்ல. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊடகங்கள் மூலம் முன்னேறி வரும் இந்தியா என்ற எண்ணத்தின் அழியாப் பயணம் இதுவாகும்.