சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப் முதல்வர்கள் கையெழுத்து..!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடையே இன்று அறிவுப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருவரும் சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப் முதல்வர்கள் கையெழுத்திட்டனர்.
பின்னர் இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் 117 பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் உருவாக்கப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரம் ஆகியவை தனது அரசாங்கத்தின் முன்னுரிமை. இந்த துறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ள டெல்லியில் இருந்து பஞ்சாப் கற்றுக்கொள்ள முடியும். விவசாயத்தைப் பற்றி பஞ்சாபிடம் இருந்து டெல்லியும் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
நாங்கள் மட்டும் நல்ல பணிகளைச் செய்தோம் என்று சொல்வது தவறு. நாடு முழுவதும் பல சிறந்த தீவுகள் இருந்தாலும், கட்சிகள் மற்றும் மாநிலங்களின் இடையே பிளவுகள் இருந்தன. அதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பிறர் செய்யும் நல்ல பணிகளில் இருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினால் இந்தியா முன்னேறும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.