ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஆதரவற்றுக் கிடந்த குழந்தை மீட்பு..!!
ஆந்திர பிரதேசம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொத்தவலசை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணியவில் ஆதரவற்ற நிலையில் கிடந்த குழந்தையை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொத்தவலசை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ் கூறியதாவது:-கொத்தவலசை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பச்சிளம் குழந்தை இருப்பதை பார்த்த நபர் ஒருவர் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டோம்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட குழந்தையை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளிடம் ஒப்படைத்துள்ளோம். ஆரம்பத்தில் குழந்தைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.