’எதிர்க்கட்சிக்கு பசிலுடன் டீல்’ !!
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா? என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று தெரிவித்தார்.
நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாகவும், இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பெரும்பான்மை மக்களின் கோரிக்கையின்படி அரசாங்கத்தை வெளியேற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில், சில இரகசியத்தன்மை இருப்பதாக தான் உணர்வதாகவும் குறிப்பிட்டார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை என தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தற்போது அதற்கு எதிராக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!
கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!
மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 பேர் கைச்சாத்திட இணக்கம் !!