;
Athirady Tamil News

இந்தி மொழி சர்ச்சை… கன்னட நடிகர் கிச்சா சுதீப்- அஜய் தேவ்கன் காரசார விவாதம்..!!

0

கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

‘ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்’ என்றார் சுதீப்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மீண்டும் இந்தி குறித்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

கிச்சா சுதீப்பை டேக் செய்து அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ‘உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கிச்சா சுதீப், “நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொண்டோம். தவறொன்றும் இல்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா” குறிப்பிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் பதிவுக்கு கிச்சா சுதீப்பின் பதில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குறிப்பாக, கன்னட ரசிகர்கள் அஜய் தேவ்கனை கடுமையாக விமர்சித்தனர்.

அதன்பின்னர், இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜய் தேவ்கன் ட்வீட் போட்டார். அதில், வணக்கம் சுதீப், நீங்கள் ஒரு நண்பர். தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைக்கிறேன். நாங்களும் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ குறை இருந்திருக்கலாம்’ என கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.