பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு..!!
பிரான்ஸ் நாட்டிற்கு இம்மாத தொடக்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபரான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான மரின் லீ பென் உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்ட தேர்தலில் யாரும் பெரும்பான்மை பெறவில்லை.
இதையடுத்து, கடந்த 24ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டி அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர்மீது குறிவைத்து தக்காளி வீசப்பட்டது. இதைக் கண்ட சுதாரித்த பாதுகாவலர்கள் குடையை விரித்து மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.