;
Athirady Tamil News

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கொண்டாடுவது கவலை அளிக்கிறது – மாடல் அழகி வருத்தம்..!!

0

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை கொண்டாடுவது கவலை அளிக்கிறது என இந்திய அமெரிக்க முன்னாள் மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்துக்களே ஒன்று புரிந்துகொள்ளுங்கள். இந்துக்களுக்கு இந்தியாவிலோ அல்லது வேறு நாட்டிலோ அச்சுறுத்தல் இல்லை. உண்மையான ஆன்மீகம் எந்த வகையிலும் வெறுப்பை விதைப்பதற்கு இடமளிக்காது. இந்த பழமையான, பரந்த நிலத்தில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ வேண்டும்.

பரவலான முஸ்லீம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை உருவாக்குகிறது. மக்களின் மனதை விஷமாக்குகிறது. இந்த பிரச்சாரம் ஆபத்தானது, மோசமானது. உங்களை விட ஒருவர் குறைவானவர் என்று நீங்கள் கருதினால், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் நீங்களும் பங்கேற்கிறீர்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு பத்மா லட்சுமி கூறினார்.

மேலும் அவர், டெல்லியின் ஜஹாங்கிர்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே மோதல் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடைபெற்ற வன்முறை குறித்து தி கார்டியன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற சர்வதேச பத்திரிகைகளின் செய்திக் கட்டுரைகளை சுட்டிகாட்டி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.