யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (படங்கள்)
வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்துநடாத்தும் பண்பாட்டு விழா இன்று காலை 9மணிமுதல் யாழ் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவருமான சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கலைஞர்களுக்கான யாழ் ரத்னா விருதும் இளங்கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றதோடு யாழ் பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட கலைஞர்களில் உலகப்புகழ் பெற்ற கலைஞராகவும் பல கலைப்படைப்புக்களை ஆற்றி மறைந்த கலைத்தூது கலாநிதி மரியோ சேவியர் அடிகளாரின் நினைவுறுத்தும் திரைநீக்கம் செய்யப்பட்டு மலர் மாலையும் நிறைவுறும் படத்திற்கு சூட்டப்பட்டு மரியோ சேவிய அடிகளாரின் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்.பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,சிறப்பு விருந்தனராக இராஜமல்லிகை சிவசுந்தரசர்மா பிரதிப் பணிப்பாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,கௌரவ விருந்தினராக கலைக்குரிசில் வசந்தி குஞ்சிதபாதம் நடனக் கலைஞர் யாழ் சத்னா ,யாழ் பிரதேச செயலர் சுதர்சன்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,சர்வமதத்தலைவர்கள்,பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,யாழ் பிரதேச சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”