இந்திய மாணவர்கள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் – சீன வெளியுறவு துறை..!!
சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர்.
இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மட்டங்களிலும் இந்தியா தனது கவலையை வெளியிட்டு வந்தது.
இதற்கிடையே, இந்திய மாணவர்களிடம் எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது. ஏனெனில் அவர்களின் படிப்பை மீண்டும் தொடங்குவது அரசியல் பிரச்சினை அல்ல என பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.
இந்நிலையில், சீனாவில் தொடர்ந்து படிக்க இந்திய மாணவர்கள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.