;
Athirady Tamil News

வலிமை தரும் எளிமையான உணவு! (மருத்துவம்)

0

அரிசி, கோதுமை எதுவாக இருந்தாலும், அதை உலக்கையில் இடித்து மாவாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். அடுத்த தலைமுறையினர்… உலக்கையை தவிர்த்து மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரிசியை மாவாக்கினர். இப்போது அதுவும் பாக்கெட் வடிவங்களில் கிடைக்கிறது. இதில் பல பிராண்டுகள் இருந்தாலும் 34 வருடமாக பாரம்பரியம் மாறாமல் தரமான முறையில் அரிசி, கோதுமை போன்றவற்றை அரைத்து பாக்கெட் செய்து கொடுத்து வருகிறார்கள் சக்தி முருகன் குழுமத்தினர். இதன் நிர்வாக இயக்குனரான கவிதா தன் நிறுவனம் பற்றி விவரித்தார்.

‘‘எங்களின் நிறுவனம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு கோதுமை மட்டுமில்லாமல் மைதா மற்றும் ராகி போன்ற மாவினை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த மாவுகள் அனைத்தும் தரம் பார்த்து அரைக்கப்படுவதால், அதில் உள்ள குணம் மற்றும் சத்துக்கள் எதுவுமே குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். 1987ம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தரமான பொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தினால், சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட் என்ற பெயரில் 1998ம் ஆண்டு புதியதொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் கோதுமை அரவை திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம்.

எங்களின் இந்த வளர்ச்சிக்கு நாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரமும், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நன்மதிப்பும், நம்பிக்கையும் தான் காரணம்” என்ற கவிதா சக்தி முருகன் நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக மட்டுமில்லாமல், சக்தி முருகன் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

‘‘பொதுவாக எங்களைப் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் அதாவது 25 கிலோ, 50 கிலோ மற்றும் 90 கிலோ என்ற கணக்கில்தான் மாவுகளை விற்பனை செய்வது வழக்கம். இதனை பெரிய ஓட்டல் நிறுவனங்கள், பேக்கரிகள் வாங்குவது வழக்கம். இதையே நாம் ஏன் சிறிய கடைகளுக்கு கொண்டு ெசல்லக்கூடாது என்று யோசித்தேன். அதன் பேரில் ஆரம்பிக்கப்பட்டது தான் டிரேடிங் நிறுவனம். இதில் அரை கிலோ முதல் 5 கிலோ வரை நாங்க விற்பனை செய்து வருகிறோம்.

இதன் மூலம் சாதாரண மக்களுக்கும் தரமான பொருள் கொடுத்த திருப்தி ஏற்படும். கோதுமை மட்டுமில்லாமல் மைதா, ரவை, சம்பா ரவை, பெருங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, ராகி மாவு போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறோம். இதில் ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு உணவு செய்ய ஏற்றது போல் தயாரிக்கிறோம்’’ என்றவர் அதன் பயன்பாடுகள் குறித்து பகிர்கிறார்.

‘‘பரோட்டா, பிரட் என ஒவ்வொரு உணவிற்கு ஏற்ப மாவுகளை தயாரிப்பது தான் எங்களின் தனிச்சிறப்பு. மைதாவில் பல்வேறு பரோட்டாக்கள் செய்யலாம்.ஸ்பெஷல் பரோட்டா மாவில், இந்திய வகை பிரட் செய்யலாம், பேக்கரி மைதா பிரட், நூடுல்ஸ், நான் செய்வதற்கு, மல்டி பர்பஸ் மைதா அனைத்து வகையான பேக்கரி உணவுகள் தயாரிக்க, எக்கனாமிக் மைதா பலகாரங்களுக்கு… இது போல் உப்புமா, கோதுமை கூழ், சப்பாத்தி, ரொட்டி, சேமியா, ராகி சேமியா, ராகி மாவு, பெருங்காயத்தூள், பெருங்காய கட்டி, மலபார் பெருங்காய கட்டி உள்ளன’’ என்றார் கவிதா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.