நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? சிதம்பரம் டுவிட்..!!
டெல்லி, அரியானா மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன. போதிய நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, அனல்மின் நிலையங்களில் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், மின் தட்டுப்பாட்டுக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என சொன்னாலும் சொல்வார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என கூறுவதை பா.ஜ.க. வழக்கமாகக் கொண்டுள்ளது.
மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என ஆரம்பித்து தற்போதுள்ள மின்சாரம், ரெயில்வே, நிலக்கரி துறைகளின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியையும் சிந்திக்கும் திறனற்றவர் எனவும் விமர்சித்துள்ளார்.