பஞ்சாப் கலவரம் எதிரொலி – மொபைல், இணையதள சேவைகள் முடக்கம்..!!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடையே மோதல் நிலவியது.
இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதலில், 2 போலீசார் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பாட்டியாலாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுக்க அங்கு காலை முதல் மாலை வரை இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.