பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- மும்பை பங்கு சந்தை தலைவர் கருத்து..!!
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான், தெரிவித்துள்ளதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியதற்காக நாங்கள் மோடி அரசுக்கு நன்றி கூறுகிறோம்.
பிரதமரின் இலவச ரேஷன் திட்டம் இந்திய ஏழை குடிமக்களை கொரோனா துயர காலத்தில் காப்பாற்றி உள்ளது. இப்போதும் கூட இது ஒரு நம்பமுடியாத மிகப்பெரிய பணியாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலவச உணவு பொருள் வழங்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முழு ஐரோப்பா மக்கள் தொகையை விட அதிகம். 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் இயக்கம் என்பது பெரும்பாலான இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாதனை திட்டம்.
கொரோனா தொற்று நோய் தடுப்பு முயற்சிகளுக்காக பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.