நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!
ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!
ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!
கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!
மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 பேர் கைச்சாத்திட இணக்கம் !!