பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி மன்னாரில் புலனாய்வாளர்கள் வலை விரிப்பு!!
பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி புலனாய்வாளர்கள் வலை விரிப்பு 02.05.2022 முள்ளிவெளி நானாட்டான் மன்னாரில் சம்பவம்.
விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு துணை போனதாகவும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் போரின் பின்னரும் புலி பயங்கரவாதத்தினை மீள் உருவாக்கம் செய்வோரோடு இணைந்து இயங்கினார். அனுமதிமறுக்கப்படட போதிலும் விடுதலைப்புலி தலைவர்களையும் இறந்த போராளிகளையும் மே 18 முள்ளிவாய்க்காலில் நினைவுகூர ஆயத்த விடயங்களை செய்துவந்த நிலையில் 10.05.2015 அன்று கைதுசெய்யபடர் பின்னர் அவர் நீதிமன்றத்துக்கு சமூகம் கொடுக்காது தலைமறைவாக்கியதனால் நீதி மன்றத்தின் தடைகளை தண்டி புலி தலைவர்களையும் புலி பயங்கரவாதிகளையும் நினைவுகூர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பிடியாணை வழங்கப்பட்டவர்களில் சுப்பிரமணியம் ஜெயராமேசன் என்பவரோடு சேர்ந்து பலரை பயங்கரவாத சட்ட்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஜெயராமேசன் உயிர் பாதுகாப்பு தேடி வெளிநாடு ஒன்றில் இருப்பதனால் அவரை தேடிவருவோரால் அவரது சகோதரர்கள் இனம் தெரியாதோராலும் புலனாய்வாளர் என தம்மை அடையாளப்படுத்த விரும்பாத இனம் தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்படுவதாக உறுதி செய்யப்படட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எமது செய்தி சேவை மேலதிக தகவல்களை சேகரித்து வரும் நிலையில் விரிவான செய்திகள் விரைவில் வெளிவரும் ……
செய்திகளுக்காக – நக்கீரன்