;
Athirady Tamil News

பெருந்தொற்று கால புற்றுநோய் சிகிச்சை!! (மருத்துவம்)

0

கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தின்போது புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்குவது சவால் மிக்கதாக மாறியுள்ளது. புற்றுநோயினால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு, இடர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றின் காரணமாக உருவாகக்கூடிய உயிரிழப்பு இடர்கள் என்ற இரு வெவ்வேறு இடர்கள் மோதும் சூழல் இதில் இருப்பதே இதற்குக் காரணம். சமீபத்தில் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளிடம் கோவிட்-19 தொற்று ஏற்படுவது அதிகமாக இருக்கிறது; அதுவும் ரத்த மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புள்ள நோயாளிகளிடம் கோவிட் தொற்று அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.

பின்பற்றப்பட வேண்டிய சில நிலையான செயல்முறைகள்

* புற்றுநோய் நோயறிதல் சோதனைகளுக்காக மருத்துவமனை / ஆய்வகங்களுக்கு செல்வதை அந்த குறிப்பிட்ட அமைவிடப்பகுதியில் நோய்த்தொற்று அளவின் அடிப்படையில் பரிசீலித்து தள்ளிப்போடலாம்.

* சிகிச்சைக்கு பிந்தைய மற்றும் கண்காணிப்பு நிலையின்போது மருத்துவமனைகளுக்கு செல்வதை தாமதிக்கலாம் அல்லது அதன் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம்.

* சிகிச்சை செயல்முறைகள் அல்லது அறுவைசிகிச்சைகள் தள்ளிப்போட இயலாத நிலையில் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்யப்பட வேண்டும் என்று இருந்தாலொழிய, கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளிடம் அவைகளை மேற்கொள்ளக்கூடாது.

* பெருந்தொற்று தொடர்பாக பயணங் கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற நிலையான அச்சுறுத்தல் இருக்கிற நிலையில், டெலி ரோபாட்டிக் அறுவைசிகிச்சைக்கான சாத்தியம் குறித்து செயலாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

இதில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு, ரோபோட்டிக்ஸ் மற்றும் பரிமாற்ற தொழில்நுட்பத்தின் வழியாக, தொலைதூரத்திலிருந்தே அறுவைசிகிச்சை நிபுணர்கள் மேற்கொள்ள இயலும்; இச்சிகிச்சை முறைகளின் தரம் மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சைப் பலன்கள் மீது எவ்வித பாதிப்போ, சமரசமோ இல்லாமலேயே இதை செய்ய இயலும். நோயாளியின் தற்போதைய மருத்துவ நிலைமையின் அடிப்படையில் தொலைபேசி வழியான டெலி கன்சல்டேஷன் செய்யப்பட வேண்டும் மற்றும் இது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.