;
Athirady Tamil News

30 வருடங்களுக்கு மேலாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளமையின் சாபமே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணம்!! (படங்கள்)

0

யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்து ஆலயங்கள் பூட்டப்பட்டு உள்ளமையால். உருவான சாபமே தற்போது நாட்டைப் பாதித்துள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையுடன், நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசந்துறை பகுதியில் மக்களின் காணிகளை பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ள போதும் மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.

ஆனால் அப்பகுதியில் காணப்படுகின்ற இந்து ஆலயங்கள் 30 வருட காலங்களுக்கு மேலாக பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அதனுடைய சாபங்களே இன்றைய நாட்டின் நிலைமைக்கு காரணமாகும்.

சடையம்மா மடம், விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்கள் அதனை விடுவித்து பூசை வழிபாடுகள் இடம் பெற அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் எவ்வித அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல மதத்தலைவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைக்கிறோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் அக்கறையாக உள்ள நிலையில் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய தீர்வும் காணப்பட வேண்டும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.