ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டி சம்பியனானது யூட் கிங்ஸ் xi அணி.!! (படங்கள்)
ஹயிட்ஸ் பிரீமியன் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணியை எதிர்த்து அறிமுக அணியான யூட் கிங்ஸ் ix அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணித் தலைவர் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய யூட் கிங்ஸ் ix அணி வீரர்கள் ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்
யூட் கிங்ஸ் வீரர் சுலக்ஸன் மைதானத்தில் சகல திசைகளிலும் சிக்சர்கள். பவுண்டரிகளாக தெறிக்க விட்டார்.
10 ஓவர்கள் நிறைவில் யூட் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களை எடுத்தது.
107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணி வீரர்களான குமரன், அன்ரனி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் அணி இலக்கை துரத்தியது. ஆனாலும் சீரான வேகத்தில் இலக்குகள் சரிக்கப்பட்டதால் இறுதியில் ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணி 10 ஓவர்களில் 7 இலக்குகளை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் 11 ஓட்டங்களால் யூட் கிங்ஸ் அணி வெற்றிபெற்று 2022 ஹயிட்ஸ் பிரீமியன் லீக் சம்பியனானது.
சம்பியன் அணியான யூட் கிங்ஸ் அணிக்கு 100,000/= பணப்பரிசிலும் சம்பியன் கிண்ணமும் இரண்டாவது இடம்பெற்ற ஹயிட்ஸ் சிற்றி கப்பிட்டல் அணிக்கு 50,000/= பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக Jude தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக காண்டீபனும் தொடரின் சிறந்த பந்து வீச்சாள ராக சுலக்சனும் தொடர் நாயகனாக வசிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.
பரிசுதொகைக்கான பிரதான அனுசரனையை dantv வழங்கியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”