பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…!!
பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நார்வே, சுவீடன், ஐஸ்லாந்து, பின்லாந்து நாட்டு பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
ஜெர்மனி, டென்மார்க்கை தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவி ஏற்ற இமானுவேல் மேக்ரானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் இந்தியா பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பொருளாதார நிலைமை குறித்தும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர்கள் விரிவாக விவாதித்தனர்.
மேலும் இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் டுவிட்டர் பதிவுகள் வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
இது குறித்து இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இரு நண்பர்களின் சந்திப்பு. இந்தியா பிரான்சு இடையேயான நட்புக்கு இது புதிய ஊக்கமளிக்கும் என தெரிவித்து உள்ளது.