;
Athirady Tamil News

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்!!

0

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்தள்ளது.

சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி, இலங்கை தபால் சேவை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாளை முன்னேடுக்கவுல்ள்ள ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP எனப்படும் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான சேவைகளை நாளை முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக்கொடியை பறக்கவிடுமாறும் ஹோட்டல்களுக்கு முன்பாக கவனயீர்ப்பை முன்னெடுக்குமாறும் ஊழியர்களிடம் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், ரயில் இயக்கப் பணியாளர்கள், தொழிற்பாடுகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள், நிலைய அதிபர்கள், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.