அவசரகாலச் சட்டம்: மருத்துவ சங்கங்களின் கோரிக்கை !!
நாட்டில் அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ள அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்குமுறைச் சட்டங்களை உடனடியாக நீக்கி சர்வஜன வாக்கெடுப்புக்கு தலைவணங்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ, கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் எனவும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்த்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அதிகாரிகளிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, தற்போதைய ஸ்திரமற்ற நிலையை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் சாதாரண குடிமக்களின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.