’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவிற்கு வர முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்..
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று (8) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை இதற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானமாகும் எனவும் தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகவும் கால தாமதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் முறையானதொரு தரப்பினரின் தலையீட்டுடன் இது தொடர்பில் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!
இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!
ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!
பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!
“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!
சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)