;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ் – உக்ரைன் மக்களுக்காக ஒளிர்ந்த ஈபிள் டவர்…!!

0

03.45: உக்ரைன் நாட்டின் அண்டை நாடான மால்டோவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக குடியேறியவர்களை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் சந்தித்தார். மேலும், அகதிகள் வசிக்கும் வீடுகளையும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

00.30: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண மின் விளக்குளால் ஒளிர வைக்கப்பட்டது.

உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிறங்களில் ஒளிர வைக்கப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.