வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)

மே 09ஆம் திகதியன்று வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் தெரிவிக்க 1997 மற்றும் 118 என்ற தொலைபேசி இலக்கங்களையும், telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.