’தேவைப்பட்டால் சுடுவோம்’ !! (வீடியோ)

இன்று (11) இரவு வேளையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் “தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்” என்றும் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய காரணமின்றி வீதிகளில் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் பொது மக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது முன்னறிவிப்பின்றி பொலிஸார் பலத்தை பிரயோகிப்பர் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.