முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே எதற்காக நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ? – இராணுவ தளபதி!!
நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், புதிதாக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்ர சில்வா கேள்வி எழுப்பினார்.
இன்று (11) இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைகளுக்கு ஆஜரான பின்னர் வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக ஒரு தகவல் உள்ளது. உண்மையில் இராணுவ தளபதி எனும் ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன பதிலளிக்க விரும்புகின்றீர்கள்? அந்த தகவல் உண்மையானது தானா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெனரால் சவேந்ர சில்வா,
நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது. அந்த அரசியலமைப்புக்கு அமையவே இராணுவம் செயற்படும். அரசியலமைப்புக்குமைய நாட்டை பாதுகாப்பதே செயற்பாடாகும். தற்போதைய சூழலில் நாம் அதனையே செய்கின்றோம். நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்.
தற்போதைய ஜனாதிபதியே நாட்டினுடைய ஜனாதிபதி. அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு அப்பதவியில் இருக்க தற்போதும் அவகாசம் இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் இரணுவத்துக்கு ஆட்சியை கைப்பற்ற எந்த தேவையும் இல்லை. அத்தோடு ஜனாதிபதியே முப்படைகளினுடைய தளபதியாவார். ஜனாதிபதியைப் போன்றே அவர் முப்படைகளின் தளபதி. அப்படி இருக்கையில் நாம் எதற்கு மீள ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)
முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !! (வீடியோ)
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !! (வீடியோ)
பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய வங்கி ஆளுனர் (நேரலை)
ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை!! (வீடியோ)
இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் – ஜனாதிபதி அழைப்பு!! (வீடியோ)
எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! (வீடியோ)
பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ)
மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)
காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)
மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)
இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)