சஜித் தாக்கப்பட்ட போதிலும் அனுர ஏன் தாக்கப்படவில்லை ? (வீடியோ)

காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு பல அரசியல்வாதிகள் சென்றிருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சென்றபோது மோசமாக தாக்கப்பட்டார்.
ஆனால் வேறொரு அரசியல் கட்சியின் தலைவர் சென்றபோது தாக்கப்படவில்லை. அப்படியென்றால் இதன் பின்னணியில் ஏதாவது காரணங்கள் இருக்கும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சென்றபோது அவர் மீது மிலேச்சித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனை நாம் ஒருபோதும் அனுதிக்கப்போவதில்லை. அவர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர். ஆகவே அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை எம்மால் அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.