பிரதமராக ரணில் 6.30க்கு சத்தியப்பிரமாணம் !! (வீடியோ)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6.30க்கு சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர், கொழும்பு-02 கங்காராமவில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.