“ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி” !! (வீடியோ)

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் ஊடாக ராஜபக்சவினரை பாதுகாக்கும் முயற்சி முனனெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கை ராஜபக்சவினரை மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கும் முயற்சி என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி”
மிகப் பெரிய அரசியல் கேலிக்கூத்து
ஜனாதிபதியை பதவி விலகுமாறே காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தும் குழுக்கள் கோரி வருகின்றன. கோட்டா கோ ஹோம் என்றே கூறுகின்றனர்.
இப்படியான சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் அரசாங்கத்துடன் நெருக்கமாக கொடுக்கல், வாங்கல் செய்யும் அரசியல் அணியினரும் ஜனாதிபதியை பதவியில் வைத்திருக்க முயற்சித்து வருகின்றன.
தற்காலிக தீர்வை வழங்கி ராஜபக்சவினர் கையில் மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். ராஜபக்சவினர் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினையில் இருந்து மீட்கும் தீர்வு தற்போது தேவைப்படவில்லை.
ராஜபக்சவினரை விலக்கி விட்டு நாட்டை மீட்கும் பதிலையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர்.
இவர்கள் தனித் தனியாக அரசியலில் ஈடுபட்டாலும் வேறு நிறங்களில் இருந்தாலும் அனைவரும் ஒரு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது இந்த யோசனையின் மூலம் எமக்கு புலப்படுகிறது.
இவர்கள் ஒரு அணியினர் என்பதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரச்சினை ஏற்படும் ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர பார்க்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் யார்?. மத்திய வங்கி கொள்ளையின் பிரதான சூத்திரதாரி.
நாட்டை அழித்தனர், ரணில் விக்ரசிங்க வேண்டாம் என்று கூறியே அரசாங்கத்தை அமைத்தனர்.ரணில் விக்ரமசிங்க வேண்டாம் எனக் கூறி ஆட்சி கைப்பற்றிய அரசாங்கத்தின் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைக்கின்றார்.
இது மிகப் பெரிய அரசியல் கேலிக்கூத்தாகவே எங்களுக்கு தெரிகிறது எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.