’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!
மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களை கொண்டே அரசாங்கத்தை முன்னெடுக்க முடியுமே தவிர பலமான அமைச்சரவையை உருவாக்க முடியாது.பாராளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. முடிந்தால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுங்கள் என ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் அமைப்பிற்கு அமையவே தான் செயற்படுவேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒருவரை பிரதமராக்கி அரசியல் அமைப்பிற்கு முரணாகவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க என்பவர் வெறும் பூச்சியம், அவருக்கு மக்கள் ஆணை ஒருபோதும் கிடைக்கவில்லை.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தால் தான் பதவி விலகவேண்டிவரும், ஆகவே ரணிலை பிரதமராக்கினால் மட்டுமே என்னால் தொடர்ந்தும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்துகொண்டு நாட்டை நாசமாக்க முடியும் என்ற நோக்கத்திலேயே அவர் சஜித்தின் கோரிக்கையை நிராகரித்தார். ரணிலை பிரதமராக்கி ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கவே கோட்டாபய ராஜபக்ஷ நினைக்கின்றார்.
ஊழல் வாதிகளுக்கு பாதுகாவலனாக ரணில் மாறியுள்ளார்.
இவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க நாம் ஒருவரும் தயாரில்லை. எமது 68 உறுப்பினர்களும் மற்றும் சுயாதீனமான 40 உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். அதேபோல் அரசாங்கத்தில் 10 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றார்.
ஆகவே, எமக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவினால் 113 பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமானால் நிரூபித்துக்காட்டுங்கள் என சவால் விடுகின்றோம். சிறுபான்மை அரசாங்கத்தை வைத்துக்கொண்டு நகர முடியாது. மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களை கொண்டே அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியுமே தவிர பலமான அமைச்சரவையை உருவாக்க முடியாது என்றார்.
மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)
’ரணில் -கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வாகாது’!! (வீடியோ)
‘ரணிலையும் புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ !! (வீடியோ)
’சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது’ !!
பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் – டக்ளஸ்!!
” கோட்டா கோ கம” குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில்!!
ராஜபக்ஷ குடும்பத்திற்கும் ரணிலுக்கும் உள்ள தொடர்பு? (வீடியோ)
மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு உயர் இடத்திலிருந்த வந்த தகவல்! அம்பலப்படுத்தப்படும் விடயம் !! (வீடியோ)
மகிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை!! (வீடியோ)