;
Athirady Tamil News

ஜனாதிபதி பதவி விலகல் ஒரு போதும் நடக்காது : நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதே இலக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி வரும் அரச எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாகவும் எனினும், அது ஒருபோதும் நடக்காதென புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். ராஜபக்ஷ அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஐதே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். எனினும், அவரது நியமனம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவி விலகல் ஒருபோதும் நடக்காதென்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். உணவு, மருந்து மற்றும் எரிபொருள் கட்டுப்படியாகாத ஆகிவிட்டது. சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்து உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.

இதனை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.