;
Athirady Tamil News

கேரளாவில் கனமழை எச்சரிக்கை- 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

0

தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்தில் எடவபதி என்றுஅழைக்கப்படுகிறது. இந்த மழை மே 27-ம் தேதிக்குள், சாதாரண தொடக்கத் தேதியை விட 5 நாட்களுக்கு முன்னதாக, தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொல்லம், பத்தன ம்திட்டா, ஆலப்புழா, எர்ணா குளம் மற்றும் இடுக்கி ஆகிய பகுதிகளுக்கு 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரமும் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் வருகிறது.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கேரள தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் ஆலோசனை நடத்தினார்.தேவைப்பட்டால் நிவாரண முகாம்களைத் திறக்க உத்தரவுகளை வழங்கினார்.

மேலும் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அலாரம் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அவசர நிலைகளை சமாளிக்க ஏற்கனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஆட்சியர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மீனவர்கள் மே 16-ந் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வாளர் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலைப்பாங்கான மாவட்டத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு, மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,

கடலோரப் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு போலீஸ் டி.ஜி.பி. காந்த் கேட்டுக் கொண்டுள்ளார். கடலோர காவல் நிலையங்கள் பாதுகாப்பு படகுகள் மற்றும் பிற வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.