அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!
பிரதமர் ரணில் தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்த நிலையில், அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.