;
Athirady Tamil News

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

0

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் தற்போது வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாட்டுக் குழுவினர் தயாராகி வருகின்றனர்.

எனினும் கடந்த இரு வருடங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்திருந்தது.வடக்கு கிழக்கின் பல இடங்களில் நீதிமன்றங்கள் ஊடாக இந்தத் தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்றிருந்தனர்.இவ்வாறான நிலையில் இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடங்கல் எதுவும் ஏற்படுமா என்பது தொடர்பில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சியில் சகல நினைவேந்தல் நிகழ்வுகளையும் நடத்த நாம் அனுமதி வழங்கியிருந்தோம். அதேபோல் இனியும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க நாம் அனுமதிக்கமாட்டோம். தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதி என்று இருக்கக்கூடாது. போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 இல் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் 2010 தொடக்கும் வடக்கு கிழக்கில் தமது உறவுகளை இழந்த மக்கள் இவ்வாறு நினைவேந்தல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசில் நினைவேந்தலுக்கு அன்றைய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

பிரதி சபாநாயகர் பதவி: சஜித் அதிரடி தீர்மானம் !!

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!

அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…!!

திடீரென சஜித்துக்கு கடிதம் அனுப்பிய ரணில்!! (வீடியோ)

இன்று பதவியேற்கவுள்ள 4 அமைச்சர்கள்…!!

ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்! (வீடியோ)

கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது!!

ரணிலுக்கு நான் ஆதரவு : சாகர காரியவசம் !!

சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)

இந்தியாவின் உடனடி உதவி !!

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர் !!

’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!

பிரதமருக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சி தெரிவிப்பு !!

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் கடிதம்!! (வீடியோ)

மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல்!! (வீடியோ)

ரணிலுடன் இணைத்து கூத்தடிக்க முடியாது!! (வீடியோ)

ஊரடங்கு சட்டம் 12 மணித்தியாலங்களுக்கு தளர்வு!! (வீடியோ)

புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?

மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)

ரணிலின் டயரியில் இருந்து !!

“நோ டீல் கம” உருவானது !! (வீடியோ)

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.